Wednesday, December 1, 2010

செயலவைக் கூட்டத்தில்....

நேற்று ஜோகூர் தமிழர்ச் சங்கக் கட்டடத்தில் 'மலேசிய சிங்கை தமிழிலக்கிய மாநாட்டுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு முக்கிய செயலவைக் குழுவினருடன், சிங்கைப் பிரதிநிதி திரு,அப்பனா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

மாநாடு ந‌டைபெற‌விருக்கும் திக‌தி மாற்ற‌ம் தொட‌ர்பாக‌ செய‌ல‌வையின‌ர் க‌ல‌ந்துரையாடின‌ர். அனைவ‌ரும் ஒருமித்து திக‌தி மாற்ற‌த்தை ஏற்றுக் கொண்ட‌ன‌ர்.


ம‌லேசிய‌ ‍ சிங்க‌ப்பூர் த‌மிழில‌க்கிய‌ மாநாடு அடுத்த‌ ஆண்டு பிப்ர‌வ‌ரி 26 & 27 திக‌திக‌ளில் ந‌டைபெறும் என்று ஏற்பாட்டுக்குழுத் த‌லைவ‌ரும் ஜோகூர் த‌மிழ‌ர்ச் ச‌ங்க‌த் த‌லைவ‌ருமாகிய‌ திரு. வேணுகோபால் ந‌டேச‌ன் அவ‌ர்க‌ள் அறிவித்தார்.

Tuesday, November 30, 2010

மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பாலம் 2011


மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பாலம் 2011

" மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய வளர்ச்சியும் செல்நெறிகளும் "

குறியிலக்கு: இரு நாட்டு இலக்கியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லல்

நாள்: 26.02.2011(சனி) ‍ 27.02.2011(ஞாயிறு)

இடம் : டெசாரு லோட்டஸ் தங்கும் விடுதி,டெசாரு,ஜோகூர்.

Saturday, November 27, 2010

மலேசிய சிங்கை தமிழிலக்கிய உறவுப்பாலம்

மலேசிய சிங்கை தமிழிலக்கிய உறவுப்பாலம்

தலைப்பு:
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய வளர்ச்சியும் செல்நெறிகளும்

குறியிலக்கு:
இரு நாட்டு இலக்கியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லல்

முன்னுரை:

மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு மிக நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. சிங்கை தனி நாடாக உருப்பெற்ற பிறகும் தொடர்ந்து வந்த இவ்வுறவு அண்மைக் காலமாக தொய்ந்த நிலையை அடைந்துள்ளது.தமிழுலகும் அதைச் சார்ந்த இலக்கிய உறவும் புதுப்பிக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தமிழிலக்கிய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவும் பல ஆக்ககரமான இலக்கியப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், பண்பட்ட முதுநிலை படைப்பாளர்கள் இந்த இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டிகளாக, முன்னோடிகளாக விளங்கவும் ஒரு தளம் தேவை. அதை உருவாக்குவதே இந்த அமைப்பின் உன்னத நோக்கமாகும்.

பொது நோக்கம்:

1. மலேசிய சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளை ஒரு நாட்டின் வாசகரிடையே கொண்டு செல்லல்.

2. மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் களம் அமைத்துக் கொடுத்தல்.

3. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து இலக்கிய பணிகளில் ஈடுபட ஆவன செய்தல்.

மாநாட்டின் உட‌ன‌டி நோக்க‌ம்:

1. இரு நாட்டுப் ப‌டைப்பாள‌ர்க‌ளிடையே ந‌ட்புற‌வை வ‌ள‌ர்த்த‌ல்.

2. ச‌ம‌கால‌ இல‌க்கிய‌ப் ப‌டைப்புக‌ளைப் ப‌ற்றிய‌ க‌ண்ணோட்ட‌மும் வ‌ள‌ர்நிலை நோக்கிய‌ முன்னெடுப்பும; சிக்க‌ல்க‌ளை அடையாள‌ங்காணுத‌ல்.

3. முதிர்ந்த‌ எழுத்தாள‌ர்க‌ளின் அனுப‌வ‌ ப‌கிர்வும் இளைய‌ த‌லைமுறையின‌ரின் எழுத்தில‌க‌ பிர‌வேச‌மும்; ஒரு செய‌ல்திட்ட‌ம் வ‌ரைத‌ல்.

மலேசிய சிங்கை தமிழிலக்கிய உறவுப்பாலம்!

வணக்கம்.
மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு தொட்டுத் தொடரும் ஒரு நீண்ட வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. அண்மைக் காலமாக இவ்வுறவு தொய்ந்த நிலையை அடைந்துள்ளதை நம்மால் மறுக்க இயலாது. இவ்வுறவைப் புதுப்பிக்கும் வகையிலும் இளைய தலைமுறையினரை இலக்கியத்தின்பால் ஈர்த்து படைப்புத்துறையில் ஆக்ககரமாகச் செயல்பட ஊக்குவிக்கவும் இந்த இலக்கிய உறவுப்பாலம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்பது திண்ணம்.

இருநாட்டின் இலக்கிய ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியாக இவ்வுறவுப்பாலம் இலக்கிய மாநாடாக உருவெடுத்துள்ளது. இம்மாநாட்டின் பொருண்மைகளாகக் கீழ்க்காண்பவை அடையாளங் காணப்பட்டுள்ளன. 
1.
 இருநாட்டின் இலக்கியப் பயணங்களின் போக்குகளையும் செல்நெறிகளையும் அடையாளங்காணல்.

2. இருநாட்டு இலக்கியப்பணிகளைச் செயலூக்கத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான செயல்திட்டங்களை வரைதல்.

3. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து 

இப்பொருண்மைகளை மையமாகக் கொண்டு, இம்மாநாடு 26/02/2011 முதல் 27/02/2011 வரை ஜொகூர், டெசாரு தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது. சிங்கை மலேசிய தமிழிலக்கியப் படைப்பாளர்களும் ஆர்வலர்களும் இம்மாநாட்டில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.