Saturday, November 27, 2010

மலேசிய சிங்கை தமிழிலக்கிய உறவுப்பாலம்!

வணக்கம்.
மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு தொட்டுத் தொடரும் ஒரு நீண்ட வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. அண்மைக் காலமாக இவ்வுறவு தொய்ந்த நிலையை அடைந்துள்ளதை நம்மால் மறுக்க இயலாது. இவ்வுறவைப் புதுப்பிக்கும் வகையிலும் இளைய தலைமுறையினரை இலக்கியத்தின்பால் ஈர்த்து படைப்புத்துறையில் ஆக்ககரமாகச் செயல்பட ஊக்குவிக்கவும் இந்த இலக்கிய உறவுப்பாலம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்பது திண்ணம்.

இருநாட்டின் இலக்கிய ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியாக இவ்வுறவுப்பாலம் இலக்கிய மாநாடாக உருவெடுத்துள்ளது. இம்மாநாட்டின் பொருண்மைகளாகக் கீழ்க்காண்பவை அடையாளங் காணப்பட்டுள்ளன. 
1.
 இருநாட்டின் இலக்கியப் பயணங்களின் போக்குகளையும் செல்நெறிகளையும் அடையாளங்காணல்.

2. இருநாட்டு இலக்கியப்பணிகளைச் செயலூக்கத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான செயல்திட்டங்களை வரைதல்.

3. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து 

இப்பொருண்மைகளை மையமாகக் கொண்டு, இம்மாநாடு 26/02/2011 முதல் 27/02/2011 வரை ஜொகூர், டெசாரு தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது. சிங்கை மலேசிய தமிழிலக்கியப் படைப்பாளர்களும் ஆர்வலர்களும் இம்மாநாட்டில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment