Thursday, February 13, 2014

மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார் தமிழ் உறவுப்பாலம்: மாநாடு 2014


மலேசியாசிங்கப்பூர்மியன்மார் தமிழ் உறவுப்பாலம்: மாநாடு 2014
( தமிழோடு இணைந்து ஒரு சுற்றுலா  : ஜூன் 5 – 9, 2014 )
மாநாடு & சுற்றுலாஏற்பாடு :
1. ஜோகூர்தமிழர்சங்கம் ( மலேசியா )
2. சிங்கப்பூர்தமிழ்அமைப்புகள்
அன்பிற்கினிய தமிழ் ஆர்வலர்களே!
கடந்தஆண்டுகளில் மலேசிய-சிங்கையிடையேயான தமிழ் உறவுப்பாலம் மொழி, இலக்கியம் ஆகிய தளங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.   இந்த ஆண்டு மியன்மார், யங்கோன் நகரமும் நம்முடன் உறவுப்பாலத்தில் இணைய உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் காரணிகளால் மியன்மார் வெளியுலத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அக்கால கட்டத்தில், தமிழ்மொழியின் வளர்ச்சியும், பண்பாடு சார்ந்த விழிப்புணர்வும் அந்நாட்டில் ஒரு தொய்வுநிலையை எட்டியது என்றால் மிகையாகாது. தற்போதுஏற்பட்டுள்ள சாதகமான அரசியல் சூழல், தமிழ்மொழி வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் உள்ளதால், இந்த ஆண்டு நமது தமிழ் உறவுப்பாலம் தனது சிறகுகளை மியன்மார் நோக்கி விரித்துள்ளது. தற்போது, மியன்மாரில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமற்றகணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழர் தம்அடையாளத்தைப்பேணிக்காத்திட அந்நாட்டு  தமிழ் இயக்கங்கள் ஆவன செய்து வருவது மனதிற்கு உவகை அளிக்கிறது. நமது இந்த மியன்மார் வருகை அங்குள்ள தமிழ்ஆர்வலர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது திண்ணம். ஆகவே, இவ்வாண்டு மலேசியசிங்கப்பூர் நாட்டு தமிழ்சார்ந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து மியன்மார் , யாங்கோனில் தமிழ்உறவுப்பால மாநாட்டுடன் கூடிய  சுற்றுலாவை எதிர்வரும் ஜூன் பள்ளி விடுமுறைகாலத்தில் ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ் உறவுப்பால மாநாட்டுடன் கூடிய  சுற்றுலாவின் நோக்கங்கள் :
1.    மலேசியாசிங்கப்பூர்மியன்மார்தமிழ்ஆர்வலர்களிடையே நட்புறவை வளர்க்கவும்;தமிழ்மொழி,பண்பாடுமேன்மைஅடையஏற்றவழிவகைகளைக்கண்டறிதல்
2.    மூன்று நாட்டு இளையோரிடையேதமிழ்மொழி,பண்பாடு சார்ந்த விழிப்புணர்வை விதைப்பதற்கான வழிவகைகளைக்கண்டறிந்து வேண்டிய உதவிகளைநல்குதல்.
3.    இந்நாடுகளில்குறிப்பாக மியன்மாரில் செயல்படும் தமிழ்வளர்ச்சிமையங்களில்தமிழ்க்கல்வியைகற்பிக்கவும்,  நூலகங்களைஅமைக்கவும் உதவி நல்குதல்.
பொது பயணத்திட்டம் :
நாள்                            : ஜூன் 5 – 9 வரை, 2014 ( புறப்பாடு05.06.2014 –
நாடு திரும்புதல்     09.06.2014 )
சுற்றுலா                     : ஜூன் 5 & 6
மாநாடு                       : ஜூன் 7 & 8
நாடுதிரும்புதல்         : ஜூன் 9
மாநாடு&சுற்றுலா (நான்கு இரவுகள் தங்கும் விடுதிக்கட்டணம், உணவு, மாநாட்டுக்கட்டணம், உள்ளூர் பயணம் :  RM 1000 மட்டும் )
கீழ்க்காணும் வங்கியில் பணம் செலுத்தி உடன் கட்டணம் செலுத்தியதற்கான சீட்டை அனுப்பி வைக்கவும்.

CIMB BANK AC : 01025003306053
PERSATUAN TAMILAR NEGERI JOHOR
 
 
முக்கியக் குறிப்பு :
மலேசியாவிலிருந்து மியன்மார் செல்வதற்குரிய விமான பயணச்சீட்டையும் குடிநுழைவுக் கட்டணத்தையும் (விசா) பேராளர்களே முன்னேற்பாடு செய்துகொள்ளவேண்டும்.
பயண விபரம்:  ஏர்ஆசியா( Air Asia : KL to Yangon )
விமானம் புறப்படும் நேரம்/ Depart :  05.06.2014காலை 6.55am  ( LCCT, KL )
விமானம் மலேசியா திரும்பும் நேரம் / Return:  09.06.2014காலை 8.30am  ( Yangon to KL )

 


RM 1000 செலுத்தி பதிவு செய்வதற்கான இறுதிநாள்: 15.03.2014
மியன்மார்சுற்றுலா&தமிழ்உறவுமாநாடுக்குப்பதிவுமலேசியப்பேராளர்கள்பின்வரும்செல்பேசிஎண்களிலதொடர்புகொள்க :

பதிவு & கட்டணத்திற்குமட்டும்ஜோகூர்தமிழர்சங்கப்பொறுப்பாளர்கள் :
1.    திரு.இல. வாசுதேவன்செயலாளர்( 019-7211065 )
2.    திரு. சு.இரவிச்சந்திரன்பொருளாளர் ( 013-7689379 )
3.    திருகு. முருகன்  - செ.உறுப்பினர் ( 012-7156824 )

மேல்விவரங்களுக் குதலைவர் : திரு. .வேணுகோபால் ( 016-7333720 ),
துணைத்தலைவர்திரு. இரா. சேதுபதி ( 012-70006976 ) தொடர்புகொள்க.


வலைப்பூ முகவரி : http://tamil-ilakkiyakuudal.blogspot.com


 

மின்னஞ்சல் முகவரி : mstlc_myanmar2014@yahoo.comகுறிப்பு:
ஆர்வமுள்ளமாணவர்கள், தமிழ்ப்பள்ளி & இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், விரிவுரைஞர்கள், தமிழ்இயக்கப்பொறுப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இம்மாநாட்டு & சுற்றுலாவில் கலந்துசிறப்பிக்க மலேசிய ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுக்கிறார்கள். உடனே அழைத்து உங்கள் வருகையை உறுதிசெய்து கொள்ளுங்கள். நன்றி.Sunday, February 24, 2013

மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு: 2013


அன்புடையீர் வணக்கம்.
கடந்த 2011-ஆம் ஆண்டு, மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால முதலாம் மாநாடு , ஜொகூர் மாநிலத் தமிழர் சங்க ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கங்களுடன் இணைந்து ஜொகூர் மாநில டெசாரு கடற்கரை தங்கு விடுதியில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
     இவ்வாண்டு 06.04.2013-இல் சிங்கப்பூரில் உமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் ஒருநாள் மாநாடாக நடைபெறவிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிங்கை தமிழ் இயக்கங்களும் ஆலயங்களும் ஒன்றிணைந்து சிங்கப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘தமிழ் மொழி மாத விழா’ நிகழ்வுகளில் ஒன்றாக மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு அரங்கேறவுள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
     ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, இவ்வாண்டு இளையோர், பெரியோர் என இருபிரிவினர்க்கு ஏற்புடைய தலைப்புகளை மலேசியா சிங்கப்பூர் இணை ஏற்பாட்டுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இளையோருக்கான தலைப்பு ‘ வாழும் தமிழ் அதனை வாழவைக்கும் அடுத்த தலைமுறை’ என்பதாகும். இத்தலைப்பில் மலேசிய நோக்கு, சிங்கப்பூர் நோக்கு என இரு நாடுகளைப் பிரதிநிதித்து இளையோர் இருவர் கட்டுரை படைப்பர். அதே போன்று பெரியோர்களுக்கான ‘ இலக்கியம் காட்டும் பொருளாதாரமும் அதன் சமகாலத்தின் பயன்பாடும்’ எனும் தலைப்பில் இருவர் தத்தம் நாடுகளைப் பிரதிநிதித்து கட்டுரை படைப்பர்.
     இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழாசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள், இலக்கியவாதிகள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இம்மாநாட்டில் மலேசியப் பேராளராகக் கலந்து கொள்ள தனிநபர் ஒருவர், மாநாட்டுப்பதிவுக் கட்டணம், போக்குவரத்து உட்பட ரி.ம 80.00 செலுத்த வேண்டும்.
ஜொகூர் பாருவிலிருந்து பேருந்து 06.04.2013 ( சனிக்கிழமை ) காலை 6.00க்குப் புறப்படும். ஒருநாள் நிகழ்வாக நடைபெறும் இம்மாநாட்டில் உணவும் வழங்கப்படும். இரவு விருந்துபசரிப்புக்குப் பிறகு பேருந்து இரவு சுமார் 10.00 மணி அளவில் ஜொகூர் பாரு வாந்தடையும்.
     முக்கியக்குறிப்பு:  இம்மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது 50 பேராளர்களுக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் பேராளர் கட்டணத்துடன் முன்பதிவு செய்ய அன்புடன் விழைக்கிறோம். முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். எனவே, விரைவாகப் பதியவும்.
     மேல்விவரங்களுக்கு பின்வரும் மலேசிய இணை ஏற்பாடுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளவும்.
1.   தலைவர், திரு ந.வேணுகோபால் ( 016-7333720 ), செயலாளர், திரு.இல.வாசுதேவன் ( 019-7211065 ), செ.உறுப்பினர், திரு.சு.இரவிச்சந்திரன் ( 013-7689379 )

Saturday, February 9, 20132வது மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பாலம்: மாநாடு இவ்வாண்டு சிங்கையில் ஏற்பாடாகி வருகிறது.
மேல்விவரங்கள்:

நாள்: 06.04.2013
இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், சிங்கப்பூர்


Tuesday, January 17, 2012

"ஆற்றுப்படை இலக்கியம்": நூல் வெளியீடு


பத்துமலை முருகப் பெருமானின் பெருமை சொல்லும் மலேசிய மண்ணில் விளைந்த முதல் "ஆற்றுப்படை இலக்கியம்": நூல் வெளியீடு.

ஏற்பாடு: ஜொகூர் மாநிலத் தமிழர் சங்கம் & மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பால செயலவைக் குழுவினர்

நாள் : 05.02.2012 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: பிற்பகல் 3.00 மணிக்கு

இடம்: அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபம், ஜொகூர் பாரு.

ஆற்றுப்படை நூல் விரைவில் வெளியீடு!


பத்துமலைத் தலம் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கு மலேசியக் கவிஞர் இயற்றி முதன்முதலாக வெளிவரும் ஓர் ஆற்றுப்படை நூல்.
 

விரைவில் வெளியீடு!

Sunday, February 20, 2011

பேராளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:


மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011

Ruj.Kami: JTS/SMPM-S/11(05)
30 ஜனவரி 2011

பேராளர்கள் அனைவருக்கும்,

வணக்கம்.
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011 மாநாட்டில் பேராளாராகப் பதிந்து கொண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டைப் பற்றிய விவரங்கள்:
அ.    நாள்:    26.2.2011 முதல் 27.2.2011 வரை ( சனி  ‍- ஞாயிறு )
    இடம்:  லோட்டஸ், டெசாரு கடற்கரை தங்கும் விடுதி
    ( Lotus Desaru Beach Resort, Desaru, Johor )
    இணையòதளம்: http://tamil-ilakkiyakuudal.blogspot.com
    மின்னஞ்சல் முகவரி : : ms_tamilliterary@hotmail.com

ஆ.    பேராளர் பதிவு  &  மதிய உணவு    
          நாள்:    26.2.2011 சனிக்கிழமை
          நேரம்: 11.00 - 12.30 நண்பகல்
           இடம்: பிரதான மண்டபம், லோட்டஸ், டெசாரு கடற்கரை தங்கும் விடுதி

26.2.2011 சனிக்கிழமை, பிற்பகல்: 2.30க்கு மாநாட்டுத் திறப்புவிழா நடைபெறுவதால் கடைசி நேர பதிவைத் தவிர்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

இ.    பேராளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்:
-இருவர், நால்வர், அறுவர்  தங்கும் வசதிகொண்ட அறைகள்
-காலை உணவு, காலைத்  தேநீர், மதிய உணவு, மாலைத்  தேநீர், இரவு உணவு
-விழா மலர்,அடையாள அட்டை, மாநாட்டுப் பை, ஆவணங்கள்

ஈ.    பதிவுக்கட்டணம்
பதிவுக்கட்டணம் முன் கூட்டியே செலுத்தப்பட்டிருக்கவேண்டும். பதிவின்போது பதிவுக்கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பதிவின்போது கட்டணம் கட்டப்பட்டதற்கான இரசீதை அவசியம் காட்டவேண்டும்.

உ.    சிறப்பு விருந்து
பேராளர்களுக்கான இன்னிசையுடன் கூடிய சிறப்பு விருந்து 26.02.2011-ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு விடுதி மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்விருந்தில் கலந்துகொள்ள எல்லாப் பேராளர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


ஊ.    நிறைவு விழா

27.02.2011-ஆம் நாள் பிற்பகல் 4.00 மணிக்கு விடுதி மண்டபத்தில் மாநாட்டின் நிறைவு விழா நடைபெறும். விடுதி நிர்வாகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி நண்பகல் 12.00-க்கு அனைத்துப் பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் விடுதி அறைகளைக் காலி செய்துவிடவேண்டும்.
   
மேல் விவரங்களுக்கு மாநாட்டுî செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
மாநாட்டில் பங்குகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    அன்புடன்,

 ( தமிழ்மணி )
    செயலாளர்,
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011

பி.கு: தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு.ந.வேணுகோபால்: 016-7333720
திரு.இரா.தமிழ்மணி :012-7814019
திரு. சு.இரவிச்சந்திரன்: 013-7689379

பேராளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!