நேற்று ஜோகூர் தமிழர்ச் சங்கக் கட்டடத்தில் 'மலேசிய சிங்கை தமிழிலக்கிய மாநாட்டுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு முக்கிய செயலவைக் குழுவினருடன், சிங்கைப் பிரதிநிதி திரு,அப்பனா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மாநாடு நடைபெறவிருக்கும் திகதி மாற்றம் தொடர்பாக செயலவையினர் கலந்துரையாடினர். அனைவரும் ஒருமித்து திகதி மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 & 27 திகதிகளில் நடைபெறும் என்று ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் ஜோகூர் தமிழர்ச் சங்கத் தலைவருமாகிய திரு. வேணுகோபால் நடேசன் அவர்கள் அறிவித்தார்.
வணக்கம்.
ReplyDeleteமலேசிய சிங்கை உறவுப்பாலம் மாநாடு ஒன்று நடைபெறுவதை அறிந்து மகிழ்ந்தேன். இம்மாநாடு கண்டிப்பாகத் தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.திகதி மாற்றமும் வரவேற்றத்தக்கது. எனவே பல தமிழ் ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்ள முயல வேண்டும். அதே வேளையில் மலேசியத் தமிழ் ஆசிரியர்களுக்குக் கட்டணம் RM75.00 என்னும் தகவல் மிகவும் வரவேற்றத்தக்கது. என்வே இம்மாநாட்டை நடத்த முன் வந்திருக்கும் குழுவினருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாநாட்டை நடத்தும் அமைப்பின் பெயரை அறிய மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி
வேதநாயகம்
மலேசிய சிங்கை படைப்பிலக்கியத்தின் நீண்ட கால உறவை மீண்டும் புதுப்பிக்க வகைசெய்யும் களமாக அமையவிருக்கிறது, மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பாலம்@மாநாடு 2011. ஏற்பாடுக்குவில் இருநாட்டு சமூக தமிழார்வலர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தியாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜோகூர் வட்டாரத்தில் தமிழ் ஆர்வலர்களுக்கென ஒரு அமைப்பை (தமிழர் சங்கம்) நிறுவி அதனைச் செம்மையாக வழிநடத்தி வந்தவர் அமரர் கே.ஆர். நடேசன் செட்டியார் அவர்கள்.அப்பெருமகனார் தமிழுக்குப் புரவலராக இருந்து தமிழ்த் தொண்டு ஆற்றிய தலைமகனார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, அந்தத் தமிழர் சங்கத்துக்குப் புத்துயிர் கொடுத்து தம் தந்தையின் வழிச் சுவடுகளைப் பின்பற்றி வருபவர் சங்கத்தின் தலைவர் திரு.வேணுகோபால் நடேசன். ( இவர் ஜோகூர் டாகடர்.ந. ஞானபாஸ்கரனின் இலவல் ஆவார்) மலேசிய சிங்கை தமிழிலக்கிய உறவை வலுவாக்க 'தமிழர் சங்கத்தின்' வழி தமிழ்ப்பணி ஆற்றிவருபவர் திரு. ந.வேணுகோபால் ஆவார். எனவே, இம்மாநாட்டின் ஆரம்ப வித்து ஜோகூர் தமிழர் சங்கம் என்றாலும் ஏற்பாட்டுக்குழுவில் மலேசிய சிங்கப்பூர் இரு நாட்டு தமிழ் ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் இச்சங்கதுடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteஏற்பாட்டுக்குழு
விரிவான தகவலுக்கு நன்றி. தமிழுக்காக வியர்வை சிந்தும் எவரும் போற்றப்படக்கூடியவர்கள். அவ்வகையில் தமிழர் சங்கத்துக்குக் குறிப்பாக திரு வேணுகோபால் நடேசன் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழை வளர்க்கும் பெரும் பணியில் நாம் ஈடுபடாவிட்டாலும் பரவாயில்லை. ஏனெனின் ஏற்கெனவே நம் தமிழ் வளர்ந்து பெரிய ஆலமரமாய் தான் நின்றுக்கொண்டிருக்கிறது. . இன்றும் இனி என்றும் அந்த பெரிய ஆலமரம் சாயாமல் தலை நிமிர்ந்து நிற்குமாறு பாதுகாத்தாலே நாம் நமிழுக்குச் செய்யும் பெரும் தொண்டாகும்.
ReplyDeleteஅன்னைத் தமிழை வளர்ப்பதை விட முதலில் அதற்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்போம் என்பதே அனைத்துத் தமிழ் நல்லுள்ளங்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.
நன்றி, வணக்கம்
வேதநாயகம்