Sunday, February 24, 2013

மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு: 2013


அன்புடையீர் வணக்கம்.
கடந்த 2011-ஆம் ஆண்டு, மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால முதலாம் மாநாடு , ஜொகூர் மாநிலத் தமிழர் சங்க ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கங்களுடன் இணைந்து ஜொகூர் மாநில டெசாரு கடற்கரை தங்கு விடுதியில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
     இவ்வாண்டு 06.04.2013-இல் சிங்கப்பூரில் உமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் ஒருநாள் மாநாடாக நடைபெறவிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிங்கை தமிழ் இயக்கங்களும் ஆலயங்களும் ஒன்றிணைந்து சிங்கப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘தமிழ் மொழி மாத விழா’ நிகழ்வுகளில் ஒன்றாக மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு அரங்கேறவுள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
     ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, இவ்வாண்டு இளையோர், பெரியோர் என இருபிரிவினர்க்கு ஏற்புடைய தலைப்புகளை மலேசியா சிங்கப்பூர் இணை ஏற்பாட்டுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இளையோருக்கான தலைப்பு ‘ வாழும் தமிழ் அதனை வாழவைக்கும் அடுத்த தலைமுறை’ என்பதாகும். இத்தலைப்பில் மலேசிய நோக்கு, சிங்கப்பூர் நோக்கு என இரு நாடுகளைப் பிரதிநிதித்து இளையோர் இருவர் கட்டுரை படைப்பர். அதே போன்று பெரியோர்களுக்கான ‘ இலக்கியம் காட்டும் பொருளாதாரமும் அதன் சமகாலத்தின் பயன்பாடும்’ எனும் தலைப்பில் இருவர் தத்தம் நாடுகளைப் பிரதிநிதித்து கட்டுரை படைப்பர்.
     இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழாசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள், இலக்கியவாதிகள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இம்மாநாட்டில் மலேசியப் பேராளராகக் கலந்து கொள்ள தனிநபர் ஒருவர், மாநாட்டுப்பதிவுக் கட்டணம், போக்குவரத்து உட்பட ரி.ம 80.00 செலுத்த வேண்டும்.
ஜொகூர் பாருவிலிருந்து பேருந்து 06.04.2013 ( சனிக்கிழமை ) காலை 6.00க்குப் புறப்படும். ஒருநாள் நிகழ்வாக நடைபெறும் இம்மாநாட்டில் உணவும் வழங்கப்படும். இரவு விருந்துபசரிப்புக்குப் பிறகு பேருந்து இரவு சுமார் 10.00 மணி அளவில் ஜொகூர் பாரு வாந்தடையும்.
     முக்கியக்குறிப்பு:  இம்மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது 50 பேராளர்களுக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் பேராளர் கட்டணத்துடன் முன்பதிவு செய்ய அன்புடன் விழைக்கிறோம். முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். எனவே, விரைவாகப் பதியவும்.
     மேல்விவரங்களுக்கு பின்வரும் மலேசிய இணை ஏற்பாடுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளவும்.
1.   தலைவர், திரு ந.வேணுகோபால் ( 016-7333720 ), செயலாளர், திரு.இல.வாசுதேவன் ( 019-7211065 ), செ.உறுப்பினர், திரு.சு.இரவிச்சந்திரன் ( 013-7689379 )

No comments:

Post a Comment