மலேசியா
– சிங்கப்பூர்
– மியன்மார் தமிழ்
உறவுப்பாலம்: மாநாடு 2014
( தமிழோடு இணைந்து ஒரு சுற்றுலா : ஜூன் 5 – 9, 2014 )
மாநாடு & சுற்றுலாஏற்பாடு :
1.
ஜோகூர்தமிழர்சங்கம்
( மலேசியா
)
2.
சிங்கப்பூர்தமிழ்அமைப்புகள்
அன்பிற்கினிய தமிழ்
ஆர்வலர்களே!
கடந்தஆண்டுகளில்
மலேசிய-சிங்கையிடையேயான தமிழ் உறவுப்பாலம் மொழி, இலக்கியம் ஆகிய தளங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை
அடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த
ஆண்டு மியன்மார், யங்கோன் நகரமும் நம்முடன் உறவுப்பாலத்தில்
இணைய உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் காரணிகளால் மியன்மார்
வெளியுலத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அக்கால
கட்டத்தில், தமிழ்மொழியின் வளர்ச்சியும், பண்பாடு சார்ந்த விழிப்புணர்வும் அந்நாட்டில் ஒரு தொய்வுநிலையை எட்டியது
என்றால் மிகையாகாது. தற்போதுஏற்பட்டுள்ள சாதகமான அரசியல் சூழல், தமிழ்மொழி வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் உள்ளதால், இந்த ஆண்டு நமது தமிழ் உறவுப்பாலம் தனது சிறகுகளை மியன்மார் நோக்கி விரித்துள்ளது.
தற்போது, மியன்மாரில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான
தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமற்றகணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழர் தம்அடையாளத்தைப்பேணிக்காத்திட அந்நாட்டு தமிழ் இயக்கங்கள் ஆவன செய்து வருவது மனதிற்கு
உவகை அளிக்கிறது. நமது இந்த மியன்மார் வருகை அங்குள்ள தமிழ்ஆர்வலர்களுக்கு
புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது திண்ணம். ஆகவே, இவ்வாண்டு மலேசிய – சிங்கப்பூர் நாட்டு தமிழ்சார்ந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து மியன்மார்
, யாங்கோனில் தமிழ்உறவுப்பால
மாநாட்டுடன் கூடிய சுற்றுலாவை எதிர்வரும் ஜூன்
பள்ளி விடுமுறைகாலத்தில் ஏற்பாடு செய்துள்ளன.
தமிழ் உறவுப்பால
மாநாட்டுடன் கூடிய சுற்றுலாவின்
நோக்கங்கள் :
1.
மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார்தமிழ்ஆர்வலர்களிடையே நட்புறவை வளர்க்கவும்;தமிழ்மொழி,பண்பாடுமேன்மைஅடையஏற்றவழிவகைகளைக்கண்டறிதல்
2.
மூன்று நாட்டு இளையோரிடையேதமிழ்மொழி,பண்பாடு சார்ந்த விழிப்புணர்வை விதைப்பதற்கான
வழிவகைகளைக்கண்டறிந்து வேண்டிய உதவிகளைநல்குதல்.
3.
இந்நாடுகளில்குறிப்பாக மியன்மாரில் செயல்படும் தமிழ்வளர்ச்சிமையங்களில்தமிழ்க்கல்வியைகற்பிக்கவும்,
நூலகங்களைஅமைக்கவும் உதவி நல்குதல்.
பொது பயணத்திட்டம் :
நாள் : ஜூன்
5 – 9 வரை,
2014 ( புறப்பாடு05.06.2014
–
நாடு திரும்புதல்
09.06.2014
)
சுற்றுலா : ஜூன்
5 & 6
மாநாடு : ஜூன்
7 & 8
நாடுதிரும்புதல் : ஜூன் 9
மாநாடு&சுற்றுலா (நான்கு இரவுகள் தங்கும் விடுதிக்கட்டணம்,
உணவு, மாநாட்டுக்கட்டணம், உள்ளூர் பயணம் : RM 1000 மட்டும் )
கீழ்க்காணும் வங்கியில் பணம் செலுத்தி உடன் கட்டணம் செலுத்தியதற்கான சீட்டை அனுப்பி
வைக்கவும்.
|
முக்கியக் குறிப்பு
:
மலேசியாவிலிருந்து மியன்மார் செல்வதற்குரிய விமான பயணச்சீட்டையும்
குடிநுழைவுக் கட்டணத்தையும் (விசா) பேராளர்களே முன்னேற்பாடு செய்துகொள்ளவேண்டும்.
பயண விபரம்: ஏர்ஆசியா(
Air Asia : KL to Yangon )
விமானம் புறப்படும் நேரம்/
Depart : 05.06.2014காலை 6.55am ( LCCT, KL )
விமானம் மலேசியா திரும்பும் நேரம்
/ Return: 09.06.2014காலை 8.30am ( Yangon to KL )
RM
1000 செலுத்தி பதிவு செய்வதற்கான
இறுதிநாள்: 15.03.2014
மியன்மார்சுற்றுலா&தமிழ்உறவுமாநாடுக்குப்பதிவுமலேசியப்பேராளர்கள்பின்வரும்செல்பேசிஎண்களிலதொடர்புகொள்க
:
பதிவு & கட்டணத்திற்குமட்டும்ஜோகூர்தமிழர்சங்கப்பொறுப்பாளர்கள்
:
1.
திரு.இல. வாசுதேவன்– செயலாளர்( 019-7211065 )
2.
திரு.
சு.இரவிச்சந்திரன் – பொருளாளர் ( 013-7689379 )
3.
திரு. கு.
முருகன் - செ.உறுப்பினர் ( 012-7156824 )
மேல்விவரங்களுக் குதலைவர் : திரு. ந.வேணுகோபால் ( 016-7333720 ),
துணைத்தலைவர்திரு. இரா. சேதுபதி ( 012-70006976 ) தொடர்புகொள்க.
வலைப்பூ முகவரி
: http://tamil-ilakkiyakuudal.blogspot.com
மின்னஞ்சல் முகவரி
: mstlc_myanmar2014@yahoo.com
குறிப்பு:
ஆர்வமுள்ளமாணவர்கள், தமிழ்ப்பள்ளி &
இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள்,
விரிவுரைஞர்கள், தமிழ்இயக்கப்பொறுப்பாளர்கள்,
வணிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இம்மாநாட்டு &
சுற்றுலாவில் கலந்துசிறப்பிக்க மலேசிய ஏற்பாட்டுக்குழுவினர்
அழைப்புவிடுக்கிறார்கள். உடனே அழைத்து உங்கள் வருகையை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
நன்றி.