Sunday, February 20, 2011

பேராளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:


மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011

Ruj.Kami: JTS/SMPM-S/11(05)
30 ஜனவரி 2011

பேராளர்கள் அனைவருக்கும்,

வணக்கம்.
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011 மாநாட்டில் பேராளாராகப் பதிந்து கொண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டைப் பற்றிய விவரங்கள்:
அ.    நாள்:    26.2.2011 முதல் 27.2.2011 வரை ( சனி  ‍- ஞாயிறு )
    இடம்:  லோட்டஸ், டெசாரு கடற்கரை தங்கும் விடுதி
    ( Lotus Desaru Beach Resort, Desaru, Johor )
    இணையòதளம்: http://tamil-ilakkiyakuudal.blogspot.com
    மின்னஞ்சல் முகவரி : : ms_tamilliterary@hotmail.com

ஆ.    பேராளர் பதிவு  &  மதிய உணவு    
          நாள்:    26.2.2011 சனிக்கிழமை
          நேரம்: 11.00 - 12.30 நண்பகல்
           இடம்: பிரதான மண்டபம், லோட்டஸ், டெசாரு கடற்கரை தங்கும் விடுதி

26.2.2011 சனிக்கிழமை, பிற்பகல்: 2.30க்கு மாநாட்டுத் திறப்புவிழா நடைபெறுவதால் கடைசி நேர பதிவைத் தவிர்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

இ.    பேராளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்:
-இருவர், நால்வர், அறுவர்  தங்கும் வசதிகொண்ட அறைகள்
-காலை உணவு, காலைத்  தேநீர், மதிய உணவு, மாலைத்  தேநீர், இரவு உணவு
-விழா மலர்,அடையாள அட்டை, மாநாட்டுப் பை, ஆவணங்கள்

ஈ.    பதிவுக்கட்டணம்
பதிவுக்கட்டணம் முன் கூட்டியே செலுத்தப்பட்டிருக்கவேண்டும். பதிவின்போது பதிவுக்கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பதிவின்போது கட்டணம் கட்டப்பட்டதற்கான இரசீதை அவசியம் காட்டவேண்டும்.

உ.    சிறப்பு விருந்து
பேராளர்களுக்கான இன்னிசையுடன் கூடிய சிறப்பு விருந்து 26.02.2011-ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு விடுதி மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்விருந்தில் கலந்துகொள்ள எல்லாப் பேராளர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


ஊ.    நிறைவு விழா

27.02.2011-ஆம் நாள் பிற்பகல் 4.00 மணிக்கு விடுதி மண்டபத்தில் மாநாட்டின் நிறைவு விழா நடைபெறும். விடுதி நிர்வாகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி நண்பகல் 12.00-க்கு அனைத்துப் பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் விடுதி அறைகளைக் காலி செய்துவிடவேண்டும்.
   
மேல் விவரங்களுக்கு மாநாட்டுî செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
மாநாட்டில் பங்குகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    அன்புடன்,

 ( தமிழ்மணி )
    செயலாளர்,
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011

பி.கு: தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு.ந.வேணுகோபால்: 016-7333720
திரு.இரா.தமிழ்மணி :012-7814019
திரு. சு.இரவிச்சந்திரன்: 013-7689379

No comments:

Post a Comment