" மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய வளர்ச்சியும் செல்நெறிகளும் " குறியிலக்கு: இரு நாட்டு இலக்கியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லல்
Tuesday, February 1, 2011
வெளியூர் பேராளர்களுக்கு....
அனைவருக்கும் கனிந்த வணக்கம்,
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பாலம்: மாநாடு 2011, மிகச் சிறப்பான ஏற்பாடுகளோடு தயாராகி வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்றோம். இது வரை 75 சதவீத முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.
அன்பார்ந்த பேராளர்களே,
வெளியூர் பேராளர்களுக்கு முக்கிய அறிவிப்பு யாதெனில், உங்களுடைய வருகையை தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ எதிர்வரும் 15.02.2011க்குள் மறுவுறுதிப்படுத்திக் கொள்ளவும்.
தங்கள் போக்குவரத்து வசதிக்காக ஜோகூர் பாரு லார்க்கின் பேருந்து நிலையத்திலிருந்தும், ஜோகூர் பாரு இராஜ மாரியம்மன் கோவிலிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் டெசாருவிற்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு இடங்களிலிருந்தும் காலை 9.30 மணிக்கு புறப்படவுள்ளன.
இதனையொட்டிய மேல்விவரங்கள் உங்களுக்கு விரைவில் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியோ தகவல் அனுப்பிவைக்கப்படும்.
மாநாட்டுப் பேராளர்கள் பின்வருபவனவற்றை மறவாமல் உடன் கொண்டுவரவும்:
1. அடையாள அட்டை
2. வங்கிமூலம் கட்டணப்பதிவுக்கான அடையாளப் பற்றுச்சீட்டு
3. மாநாட்டுக் கட்டண இரசீது
4. ஒளிப்படம் (புகைப்படம்) (மின்னஞ்சல் வழி அனுப்பாதவர்கள்)
விரைவில் அனுப்பவும்.
பேராளர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
நன்றி.
ஏற்பாட்டுக்குழுவினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment